ஷா ஆலம், அக். 18- காலத்திற்கு ஒவ்வாத சட்டங்களை மறு ஆய்வு
செய்ய சட்ட சீர்திருத்தக் குழு ஒன்றை அரசாங்கம் அமைக்கும்.
கால மாற்றத்திற்கு ஏற்ப ஏற்புடையவையாக இருக்கும் வகையில்
மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பழையச் சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்பட
வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
தற்போதைய காலச் சூழலுக்கு பொருந்தும் வகையில் 1950ஆம் ஆண்டு
ஒப்பந்தச் சட்டம் போன்ற வர்த்தகம் தொடர்பான சட்டங்களை புதுப்பிக்கும்
பணியில் அக்குழு ஈடுபடும் என்று அவர் சொன்னார்.
மக்களவையில் இன்று 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை
தாக்கல் செய்த போது நிதியமைச்சருமான அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் உள்ள பெரும்பாலான சட்டங்கள் சுதந்திரத்திற்கு முன்னர்
இயற்றப்பட்டவை என்பதால் தற்போதைய சூழலுக்கு ஏற்புடையவையாக
இல்லை என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா –ஓத்மான்
முன்னதாகக் கூறியிருந்தார்.


