ஷா ஆலம், அக். 18- வசதி .குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த
இடைநிலைப் பள்ளி மாணவர்கள், பட்டதாரிகள் மற்றும் வேலை தேடும்
15,000 இளைஞர்களின் மோட்டார் சைக்கிள் லைசென்ஸ் கட்டணத்தை
அரசு ஏற்கும்.
மேலும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 60,000
இளையோரின் பாதுகாப்புக்காக 67,000 கவசத் தொப்பிகள் வழங்கும்
திட்டமும் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் கூறினார்.
சொந்த ஊர்களுக்குச் செல்லும் வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த
பட்டத்தாரி மாணவர்களுக்கு குறிப்பாக சபா மற்றும் சரவா மாநிலங்களைச்
சேர்ந்தவர்களுக்கு 60,000 விமான டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும்
அவர் தெரிவித்தார்.
வாகனங்களுக்கான சிறப்பு பதிவு எண்களை விற்பனை செய்ததன் மூலம்
கிடைத்த நிதியைக் கொண்டு வசதி குறைந்தவர்களுக்கான இந்த உதவித்
திட்டங்களை அரசாங்கம் அமல் செய்வதாக அவர் சொன்னார்.


