ஷா ஆலம், அக். 18 - நாட்டிலுள்ள 85 விழுக்காட்டு மக்களுக்கு
பெட்ரோலுக்கான உதவித் தொகையாக சுமார் 1,200 கோடி வெள்ளியை
அரசாங்கம் தொடர்ந்து வழங்கி வருகிறது.
பெரும்பாலான மக்களுக்கு உதவித் தொகை வழங்கும் கடப்பாட்டை
அரசாங்கம் தொடர்ந்து நிறைவேற்றி வரும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ
அன்வார் இப்ராஹிம் கூறினார்.
குறிப்பாக, மின்சாரத்திற்கான உதவித் தொகை மறுசீரமைப்பு செய்யப்பட்ட
போது 85 விழுக்காட்டு மக்களுக்கு அதனால் பாதிப்பு ஏற்படாத அதே
அணுகுமுறை பெட்ரோல் உதவித் தொகை மறுசீரமைப்பிலும்
பயன்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
தற்போது மலேசியாவில் ரோன்95 பெட்ரோலின் விலை லிட்டர் ஒன்றுக்கு
வெ.2.05 ஆகும். அதே சமயம் தாய்லாந்தில் 5.85 வெள்ளியாகவும்
சிங்கப்பூரில் வெ.9.02 வெள்ளியாகவும் சவூதி அரேபியாவில் வெ.2.66
வெள்ளியாகவும் விற்கப்படுகிறது என்று அவர் சொன்னார்.
பெட்ரோலின் குறைவான விலை காரணமாக கடந்த 2023ஆம் ஆண்டு
அந்த எரிபொருளுக்கு அரசாங்கம் வழங்கிய உதவித் தொகை 2,000 கோடி
வெள்ளியை எட்டியது என்று அவர் தெரிவித்தார்.
ஆகவே. அடுத்தாண்டு மத்தியில் ரோன்95 பெட்ரோலுக்கான உதவித்
தொகை மறுசீரமைப்பு செய்யப்படும் என்றார் அவர்.


