கோலாலம்பூர், அக், 18 - பிரதமர் இன்று அறிவித்த்த 2025ஆம் ஆண்டிற்கான
வரவு செலவுத் திட்டத்தில் சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில்
மேம்பாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மடாணி அரசாங்கத்தின் இந்த வரவு செலவுத் திட்டத்தில் சபா
மாநிலத்திற்கு 670 கோடி வெள்ளியும் சரவாக் மாநிலத்திற்கு 590 கோடி
வெள்ளியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அவ்விரு மாநிலங்களிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக
இந்த நிதி ஒதுக்கப்படுவதாக அடுத்தாண்டிற்கான வரவு செலவுத்
திட்டத்தை தாக்கல் செய்த போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
கூறினார்.
மேலும், சபா மற்றும் சரவாக் மாநிலங்களுக்கான சிறப்பு நிதி ஒரு மடங்கு
அதிகரித்து முறையே 60 கோடி வெள்ளி மற்றும் 30 கோடி வெள்ளியாக
வழங்கப்படும் என அவர் சொன்னார்.
மாநிலங்களுக்கு இடையிலான மேம்பாட்டு இடைவெளி குறைக்கப்பட
வேண்டும். குறிப்பாக சாலை, மின்சாரம், சுத்தமான நீர் விநியோகம்
போன்ற விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என
அவர் தெரிவித்தார்.


