NATIONAL

நாட்டின் வரலாற்றில் அதிக தொகையை உள்ளடக்கிய வரவு செலவுத் திட்டம்

18 அக்டோபர் 2024, 9:13 AM
நாட்டின் வரலாற்றில் அதிக தொகையை உள்ளடக்கிய வரவு செலவுத் திட்டம்

கோலாலம்பூர், அக். 18 - நாட்டின் வரலாற்றில் அதிகத் தொகையைக்

கொண்ட வரவு செலவுத் திட்டமாக அடுத்தாண்டிற்கான வரவு செலவுத்

திட்டம் விளங்குகிறது.

எதிர்வரும் 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 42,100 கோடியை

உள்ளடக்கியுள்ள வேளையில் அதில் 33,500 கோடி வெள்ளி நிர்வாகச்

செலவினங்களுக்கும் 8,600 கோடி வெள்ளி மேம்பாட்டுத் திட்டங்களுக்கும்

பயன்படுத்தப்படும்.

நாடாளுமன்றத்தில் இன்று 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்

திட்டத்தை தாக்கல் செய்த போது பிரதமரும் நிதியமைச்சருமான

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனைத் தெரிவித்தார்.

அடுத்தாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5 முதல் 5.5

விழுக்காடாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள வேளையில் கூட்டரசு

அரசாங்கத்தின் வருமானம் 33,970 கோடி வெள்ளியாகப் பதிவாகும் என

மதிப்பிடப்படுவதாக அவர் சொன்னார்.

அதே சமயம் பெட்ரோலியப் பொருள் மூலம் கிடைக்கும் வருமானம் 6,200

கோடி வெள்ளியாக இருக்கும். நட்டின் நிதிப் பற்றாக்குறையும் 3.8

விழுக்காடாகப் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என அவர்

குறிப்பிட்டார்.

நாட்டின் பண வீக்கமும் அடுத்தாண்டு 2 முதல் 3.5 விழுக்காடு வரை

இருக்கும் என்று அவர் மேலும் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.