கோலாலம்பூர், அக். 18- எதிர்வரும் 2025 ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு
42,100 கோடி வெள்ளி அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20.1
விழுக்காடு ஒதுக்கப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் மேம்பாடு காணும் என்ற
எதிர்பார்ப்புக்கேற்ப மத்திய அரசாங்கத்தின் வருமானமும் 5.5 விழுக்காடு
உயர்வு கண்டு 33,970 கோடி வெள்ளியாகப் பதிவாகும் என
கணிக்கப்பட்டுள்ளது.
இன்று நாடாளுமன்றத்தில் 2025ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்
திட்டத்தை தாக்கல் செய்த போது பிரதமரும் நிதியமைச்சருமான
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த விபரங்களை வெளியிட்டார்.


