ஹலால் தொழில் தொடர்பான நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்வதற்காக
ஜப்பானைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டது.
ஹலால் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பிற்கு சிலாங்கூர் எம்பிஐ மற்றும்
சிஎம் பிளஸ் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான துணை நிறுவனத்திற்கு
இடையேயான ஒத்துழைப்பு ஹலால் சான்றிதழ் வழிகாட்டுதல் மற்றும்
பயிற்சியின் அம்சங்களை உள்ளடக்கியது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஹலால் இன்டர்நேஷனல் சிலாங்கூர் நிர்வாகி
முகமட் சைரில் ஷோகட் அலி மற்றும் சிஎம் பிளஸ் கார்ப்பரேஷன் தலைவர்
``Tetsuo Fujioka`` ஆகியோர் சமீபத்தில் கையெழுத்திட்டதாக முகநூல்
மூலம் எம்பிஐ தெரிவித்துள்ளது.
இந்த மூலோபாய ஒத்துழைப்பு சிலாங்கூரில் மட்டுமின்றி சர்வதேச
அரங்கிலும் ஹலால் வணிக வலையமைப்பிற்கான அணுகலை மேம்படுத்தி
விரிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஹலால் தொழிலில் ஒரு உலகளாவிய தேசமாக மாற விரும்பும்
சிலாங்கூரின் எண்ணத்திற்கு ஏற்ப உள்ளது. இதன் மூலம் மாநிலத்திற்கு
நிலையான பொருளாதார வளர்ச்சி உருவாகும்," என்று நம்பப்படுகிறது.
இந்த மாநிலத்திலும் மலேசியாவிலும் ஹலால் சுற்றுச்சூழல் அமைப்பு மேலும்
முன்னேறி வருவதைக் கருத்தில் கொண்டு ஜப்பான் சிலாங்கூருடன்
இத்துறையில் பயிற்சி பெற ஆர்வமாக உள்ளது என்றார்.
ஹலால் இன்டர்நேஷனல் சிலாங்கூர் என்பது சிலாங்கூர் ஹலால்
செயல்திட்டம் 2020-2030 ன் மூன்று திட்டங்களுக்கு முன்னணி நிறுவனமாகச்
செயல்படுவதோடு, சிலாங்கூரை ஹலால் துறையில் உலகளாவிய மாநிலமாக
மாற்றும் முயற்சியாகும்.


