NATIONAL

ஸ்ரீ மூடாவில் வெள்ளம் தணிக்கும் திட்டத்தை செயல்படுத்த 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கிடு

18 அக்டோபர் 2024, 4:37 AM
ஸ்ரீ மூடாவில் வெள்ளம் தணிக்கும் திட்டத்தை செயல்படுத்த 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கிடு

ஷா ஆலம், அக் 18: ஷா ஆலம், ஸ்ரீ மூடா பகுதியில் வெள்ளம் தணிக்கும்

திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு மொத்தம் 100 மில்லியன் ரிங்கிட்

ஒதுக்கியுள்ளது.

வெள்ளக் கட்டுப்பாட்டு நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டம் 2029

இல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என கோத்தா கெமுனிங்

சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சாம்புநாதன் கூறினார்.

சிலாங்கூர் டிவியின் டிக் டோக்கில் ஒளிபரப்பப்பட்ட Apa Cer YB Musim 2

நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்டுவிட்டதாகவும்,

இப்போது தணிப்புத் திட்டத்தின் வடிவமைப்பு ஆய்வு கட்டத்தில்

இருப்பதாகவும் கூறினார்.

மற்றொரு திட்டமானது தாமான் ஸ்ரீ மூடா பம்ப் ஹவுஸின் கட்டுமானம்

ஆகும். இது கடந்த ஆகஸ்ட் மாதம் முழுமையாக செயல்பட்டது. வெள்ள

அபாயத்தைக் குறைக்க கூடுதலாக மூன்று பம்ப் யூனிட்கள் சேர்க்கப்பட்டன.திடீர் வெள்ளத்திற்கு காரணமாக அமையும் குப்பைகளால் அடைக்கப்பட்டுள்ள

கால்வாய்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த கூட்டு துப்புரவு

பணிகளை மேற் கொள்வதோடு, தனது தரப்பு அப்பகுதியை தொடர்ந்து

கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.

கடந்த டிசம்பர் 2021இல் ஏற்பட்ட வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட

இடங்களில் தாமான் ஶ்ரீ மூடாவும் ஒன்றாகும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.