NATIONAL

இன்று பிற்பகல் பிரதமர் பட்ஜெட் 2025ஐ தாக்கல் செய்வார்

18 அக்டோபர் 2024, 4:34 AM
இன்று பிற்பகல் பிரதமர் பட்ஜெட் 2025ஐ தாக்கல் செய்வார்

கோலாலம்பூர், அக் 18 - இன்று பிற்பகல் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மக்களவையில் பட்ஜெட் 2025 ஐ தாக்கல் செய்யவுள்ளார்.

அன்வார் தலைமையிலான மடாணி அரசாங்கத்தின் கீழ் சமர்ப்பிக்கப்படும்

மூன்றாவது பட்ஜெட் மற்றும் 12 வது மலேசியத் திட்டத்தின் (2021-2025) கீழ்

இறுதி பட்ஜெட்டாக இது இருக்கும்.

பட்ஜெட் 2025 இன் விளக்கக்காட்சி உள்ளூர் தொலைக்காட்சி நிலையங்கள்

மற்றும் சமூக ஊடகங்களில் மாலை 4 மணிக்கு நேரடியாக ஒளிபரப்பப்படும்.

பட்ஜெட் 2025 மடாணி பொருளாதார கட்டமைப்பின் முக்கிய அம்சங்களான உச்சவரம்பை உயர்த்துதல் ; தளத்தை உயர்த்துதல், `நல்லாட்சி மற்றும் பொதுத்துறை மறுசீரமைப்பு` ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.

1. உச்சவரம்பு உயர்த்துதல் மற்றும் உந்துதல் ,

2.பொருளாதாரத்தை  மறுசீரமைப்பதையும், நாட்டின் போட்டித்தன்மையை உயர்த்துவதையும்   நோக்கமாகக் கொண்டுள்ளது.

3. ஆசியாவின் பொருளாதாரத்தில் மலேசியாவை  முன்னணியில் நிலைநிறுத்துவது

அதே நேரத்தில் தளத்தை உயர்த்துவது பாகுபாடுகள் அற்ற வாய்ப்புகள் மூலம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நல்லாட்சி மற்றும் பொதுத்துறை மறுசீரமைப்பு அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மலேசியாவின் கோடிட்டுக் காட்டப்பட்ட இலக்குகளை அடைய முடியும்

என்பதை உறுதிப்படுத்துகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.