NATIONAL

காரின் பின்புறம் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மரணம்

18 அக்டோபர் 2024, 2:20 AM
காரின் பின்புறம் மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மரணம்

நீலாய், அக் 18: இன்று வடக்கு-தெற்கு விரைவுச் சாலையின் (பிளாஸ்) 285

கிலோமீட்டரில் வடக்கு நோக்கிச் செல்லும் அவசரப் பாதையில்

நிறுத்தப்பட்டிருந்த காரின் பின்புறம் மோட்டார் சைக்கிள் மோதியதில் அதன்

ஓட்டுநர் உயிரிழந்தார்.

தலை மற்றும் பல உடல் பாகங்களில் ஏற்பட்ட பலத்த காயங்கள் காரணமாக

சம்பவ இடத்திலேயே நீலாயிலிருந்து ஷா ஆலம் நோக்கி சென்று

கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் (37) உயிரிழந்ததாக துவாங்கு

ஜாஃபர், சிரம்பான் மருத்துவமனையின் மருத்துவ உதவியாளர் உறுதி செய்தார்

என நீலாய் மாவட்ட காவல்துறைத் தலைவர் சுப்ரிட்டெண் அப்துல் மாலிக்

ஹாசிம் தெரிவித்தார்.

காரின் ஓட்டுநர் அவசர பாதையில் வாகனத்தை (புரோட்டான் பெசோனா)

சோதனை செய்ய நிறுத்தினார். அச்சமயம் ஒரு ஹோண்டா வேரியோ ரக

மோட்டார் சைக்கிள் காரின் பின்புறத்தில் மோதியது,`` என்று அவர் கூறினார்.

சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் கீழ் இந்த

வழக்கு விசாரிக்கப் பட்டதாகவும் மேலும் விசாரணைகள் இன்னும் நடந்து

வருவதாகவும் அப்துல் மாலிக் கூறினார்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.