ஷா ஆலம்,அக் 17: ஆசியாவின் மிக அழகான 10 நூலகப் பட்டியலில் ராஜா துன் உடா நூலகம் இடம்பெற்றுள்ளது. இது SeaAsia Stats கணக்கெடுப்பு மூலம் தெரிவந்துள்ளது.
2011 இல் திறக்கப்பட்ட மாநில நூலகம் 10 வது இடத்தைப் பிடித்ததுள்ளது. பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு மலேசியா நூலகம் இதுவாகும்.
அதிகாரப்பூர்வ SeaAsia Stats சமூக தளத்தின் மூலம் வெளியிடப்பட்ட முடிவில், சிங்கப்பூரின் Rotunda நூலகம் முதல் இடத்தையும், இந்தோனேசிய தேசிய நூலகம் இரண்டாம் இடத்தையும் மற்றும் சியோலின் ஸ்டார்ஃபீல்ட் நூலகம் மூன்றாவது இடத்தையும் இடம்பெற்றுள்ளன.
ராஜா துன் உடா நூலகம் ஆறு மாடிகள் உயரத்தில் 203,600 சதுர அடி பரப்பளவில் பல்வேறு வண்ணங்கள் மற்றும் சமகால வடிவமைப்பைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.
சிலாங்கூர் பொது நூலகக் கழகத்தால் (PPAS) நடத்தப்படும் இந்நூலகத்தில் 400,000க்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. மேலும் ஒரே நேரத்தில் 8,000 பேர் அந்நூலகத்தினுள் இருக்க முடியும்.


