NATIONAL

பண்டிகைக் கால விலை கட்டுப்பாடு (தீபாவளி) திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்

17 அக்டோபர் 2024, 6:28 AM
பண்டிகைக் கால விலை கட்டுப்பாடு (தீபாவளி) திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்

செர்டாங், அக். 17 - தீபாவளிக்கு பண்டிகைக் கால  விலைத் கட்டுப்பாடு  திட்டம் (SHMMP) விரைவில் அறிவிக்கப்படும் என்று உள்நாட்டு வர்த்தகம்  மற்றும் வாழ்க்கைச் செலவுத் துறை அமைச்சர் டத்தோ ஆர்மிசான் முகமட் அலி  தெரிவித்தார்.

தீபாவளிக்காக SHMMP இல் பட்டியலிடப்பட வேண்டிய பொருட்களை  அடையாளம் காண தொழில் துறைமுனைவோர் உடன் அமைச்சகம் செயல்பட்டு வருகிறது என்றார்.

. பட்டியலிடப்பட வேண்டிய பொருத்தமான பொருட்களைக் கண்டறிந்து இறுதி செய்ய நாங்கள் இப்போது  சம்பந்தப்பட்ட தொழில் துறையுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.பொருட்கள் இறுதிப் படுத்தப் பட்டதும், விலை கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களின்  பட்டியலை “விரைவில் அறிவிப்போம்  என்று அவர் அக்ரோ இன்வெஸ்ட் 2024 இல்  கூறினார்.

SHMMP ஆனது 2000 ஆம் ஆண்டு முதல் விலைக் கட்டுப்பாடு மற்றும் அதிக இலாபம்  பெறுதல் எதிர்ப்புச் சட்டம்  2011 இன் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், உற்பத்தியாளர், மொத்த விற்பனையாளர் மற்றும்    சில்லறை விற்பனையாளர் ஆகியோரின் நிலையில் அதிகபட்ச விலை நிர்ணயம்  செய்யப்பட்டு, பல வகையான அத்தியாவசிய பொருட்கள் பண்டிகைக் கால விலைக் கட்டுப்பாட்டுப்  பொருட்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.