கோலாலம்பூர்,அக் 16: ஆசியான் பகுதியிலும் உலகிலும் ஒரு தொழில் நுழைவாயிலாக அதன் நிலையை வலுப்படுத்த ஹலால் சுற்றுச்சூழல் அமைப்பை ஆராய்வதற்கான முயற்சிகளை சிலாங்கூர் தீவிரப்படுத்தி வருகிறது.
2025 ஆம் ஆண்டு ஆசியான் தலைவராக மலேசியா தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பது, இந்த மாநிலத்தையும் நாட்டையும் உலகின் ஹலால் மையமாக உயர்த்துவதன் மூலம் இத்துறையை மேம்படுத்துவதற்கான வாய்ப்பைத் திறக்கிறது என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.
"உலக அளவில் இந்தத் தொழிலை மேலும் விரிவுபடுத்துவதற்கு முன் நாம் அதை முதலில் ஆசியாவில் தொடங்குவோம். ஹலால் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான தேவையில் மேலும் கவனம் செலுத்தப்படுகிறது.
"இந்தத் துறையானது மாநிலத்திற்கு வருமானத்தை ஈட்டுவது மட்டுமல்லாமல், அனைத்து வகையான வணிகங்களும் செழிக்க வாய்ப்புகளை உருவாக்குகிறது," என்று அவர் கூறினார்.


