NATIONAL

மின் விளக்கைப் பிடித்திருந்த போது மின்சாரம் தாக்கி மாணவர் மரணம்

16 அக்டோபர் 2024, 9:48 AM
மின் விளக்கைப் பிடித்திருந்த போது மின்சாரம் தாக்கி மாணவர் மரணம்

ஜெர்தே, அக் 16: நேற்றிரவு மதரஸா விடுதியின் சிற்றுண்டி சாலையில்  மின்விளக்கு பிடித்திருந்த போது மின்சாரம் தாக்கி தஹ்ஃபிஸ் மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் இரவு 10.27 மணியளவில் நடந்ததாக பெசூட் மாவட்ட காவல்துறை தலைவர் சுப்ரிட்டெண் அப்துல் ராசாக் முகமட் கூறினார்.

"விளக்கைப் பிடிக்கும் போது முகமட் ஃபஹிம் ரசிடி ஷரிபுல் ஹாடியின் (18),கைகள் ஈரமாக இருந்ததாலும், பலத்த மழை பெய்ததாலும் இந்த சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது" என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவரை மதரஸாவில் உள்ள ஆசிரியர் ஒருவர் பெசூட் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துள்ளார்.

எனினும், கிள்ளானை சேர்ந்த பாதிக்கப்பட்டவர், நேற்று இரவு 11.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த வழக்கு திடீர் மரணம் (SDR) என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.