ஷா ஆலம், அக் 16: பொதுப் பல்கலைக்கழகங்களில் பயிலும் பி 40 மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு உதவியை உயர்கல்வி அமைச்சகம் தொடர்ந்து வழங்கி வருகிறது.
பல்கலைக்கழகத்தில் பயிலும் பி40 குடும்பத்தின் முதல் பிள்ளைக்கு கல்வி கட்டணம் இல்லாமல் உதவித்தொகை பெற பரிசீலிக்கப்பட்டது என்று அதன் துணை அமைச்சர் டத்தோ முஸ்தபா சக்முட் கூறினார்.
"மேலும் பி 40 குடும்பத்திலிருந்து பல்கலைக்கழகத்தில் நுழையும் முதல் பிள்ளை கட்டணம் இல்லாமல் உதவித் தொகையைப் பெறுவது பற்றி நாங்கள் பரிசீலிப்போம். ஆனால் அம்மாணவர் 3.0 CGPA பெற்றிருக்க வேண்டும்.இது முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாகும்.
"B40 மாணவர்களின் நிலுவையில் உள்ள கட்டணங்கள் ;நீக்குவது குறித்து முடிந்தவரை சிறப்பாகவும் விரிவாகவும் ஆய்வு செய்ய வேண்டும். பல்கலைக்கழகம் இந்த விஷயத்தை விவரிக்கும் மற்றும் இந்த விவகாரம் தள்ளுபடி செய்ய வேண்டுமா, இல்லையா என்பதை அமைச்சகம் மதிப்பிடும்," என்று அவர் கூறினார்.
இன்று மக்களவையில் கோலா கிராவ் நாடாளுமன்ற உறுப்பினர் கமல் ஆஷாரியின் கூடுதல் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
அரசுப் பல்கலைக்கழகத்தில் பயிலும் பி40 மாணவர்களுக்கான நிலுவையில் உள்ள கட்டணத் தொகையை தள்ளுபடி செய்யும் திட்டம் குறித்து அரசின் கருத்தை அறிய கமல் விரும்பினார்.
இதற்கு கருத்துத் தெரிவித்த முஸ்தபா, பி40 குடும்பங்களைச் சேர்ந்த பல்கலைக்கழகத்தில் தங்கள் படிப்பை வெற்றிகரமாகத் தொடரும் மாணவர்கள் பொதுப் பல்கலைக்கழகத்தின் பதிவுக் கட்டணம் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்றார்.


