NATIONAL

நீர் சேவை துறையில் ஊழலற்ற  செயல்பாடுகளுக்கான திட்டம் உருவாக்கப்படும்

16 அக்டோபர் 2024, 4:13 AM
நீர் சேவை துறையில் ஊழலற்ற  செயல்பாடுகளுக்கான திட்டம் உருவாக்கப்படும்

புத்ராஜெயா,அக் 16: நீர் சேவை துறையில்  ஊழலற்ற  செயல்பாடுகளுக்கான திட்டம்  தேவை குறிப்பிட்ட மூலோபாய திட்டத்தை உருவாக்க, தேசிய நீர் சேவை ஆணையம்

(ஸ்பான்) நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றும்.

மலேசியாவில் நீர் சேவைத் தொழில் ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும்

முறைகேடுகளில் இருந்து விடுபட, சிறந்த நடைமுறைகளை ஆய்வு

செய்வதற்கான தகுந்த அணுகுமுறைகள் அந்த மூலோபாயத் திட்டத்தில்

இருக்கும் என்று ஸ்பான் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இத்திட்டம்,ஒரு வெளிப்படையான மற்றும் திறந்த கொள்முதல்

செயல்முறையில் கவனம் செலுத்துகிறது. அத்துடன் உரிமதாரர்களால்

மேற்கொள்ளப்படும் பெருநிறுவன சமூகப் பொறுப்பு திட்டங்களின்

ஒழுங்குமுறையை வலுப்படுத்துகிறது.

சட்டம் 655 (தண்ணீர் சேவைகள் தொழில்துறை சட்டம் 2006) அல்லது

தற்போதைய விதிமுறைகளுக்கு இணங்காததாக சந்தேகிக்கப்படும் எந்த ஒரு

தனிநபர் அல்லது அமைப்பு மீதும் சட்டத்தின் அடிப்படையில் கடுமையான

நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிசெய்ய ஸ்பான் உறுதியளிக்கிறது.

தண்ணீர் துறையில் ஊழல் நடைமுறைகள் மற்றும் அதிகார

துஷ்பிரயோகத்திற்கு எதிராக ஸ்பான் ஜீரோ டாலரன்ஸ்

நடைமுறைப்படுத்துவது,  என்று அந்த அறிக்கை கூறுகிறது.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.