NATIONAL

பள்ளி அடிப்படையிலான இறுதி தேர்வை நடத்துவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது

16 அக்டோபர் 2024, 4:05 AM
பள்ளி அடிப்படையிலான இறுதி தேர்வை நடத்துவதற்கு ஒப்புதல்  வழங்கப்பட்டுள்ளது

கோலாலம்பூர், அக்டோபர் 15 - பள்ளி அடிப்படையிலான மதிப்பீட்டின்

(பிபிஎஸ்) மேம்பாடுகளின் ஒரு பகுதியாக 2024/2025 அமர்வுக்கான இறுதி

தேர்வை நடத்துவதில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளுக்கு கல்வி அமைச்சகம்

ஒப்புதல் வழங்கியுள்ளது.

இறுதிக் தேர்வு ஆரம்பப் பள்ளி மதிப்பீட்டுத் தேர்வு (UPSR) அல்லது படிவம்

மூன்று மதிப்பீடு (PT3) ஆகியவற்றிற்கு மாற்றாக அமையாது. ஏனெனில் இது

ஒரு மையப்படுத்தப்பட்ட தேர்வு அல்ல. இந்தச் சோதனை மாணவர்களுக்குத்

தேர்வு தொடர்பான மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

இந்த தேர்வின் நோக்கம் மாணவர்கள், பள்ளிகள், மாவட்டங்கள் அல்லது

மாநிலங்களின் செயல்திறனை ஒப்பிடுவது அல்ல, ஆனால் அடுத்த கற்றல்

கட்டத்திற்கு மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்கும் ஆதரவளிப்பதாகும்

ஆகும்  என்று துணை கல்வி அமைச்சர் வோங் கா வோ கூறினார்.

UPSR மற்றும் PT3 தேர்வு முறைகளை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து

அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று ஆராவ் எம்பி டத்தோஸ்ரீ ஷாஹிடான்

காசிமின் தீர்மானத்திற்கு வோங் பதிலளித்தார்.

பிபிஎஸ் கற்றல் முறை மூலம், ஆசிரியர்களும் மாணவர்களும் கற்றல்

சவால்களையும் கண்டறிந்து, தலையீட்டுத் திட்டங்களை செயல்படுத்த

அனுமதிப்பதாக அவர் விளக்கினார்.

இந்த அணுகுமுறை மாணவர்களிடையே திறமைகள் மற்றும் திறன்களின்

பன்முகத்தன்மையை ஊக்குவிக்கிறது என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.