ALAM SEKITAR & CUACA

4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை

16 அக்டோபர் 2024, 2:56 AM
4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை

ஷா ஆலம், அக் 16  – இன்று காலை வரை 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்புள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.

அவை கோலா சிலாங்கூர், கிள்ளான், சிப்பாங் மற்றும் கோலா லங்காட் ஆகிய மாவட்டங்கள் ஆகும்.

இதே வானிலைதான் பேராக், மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக அத்துறை கூறியது.

மணிக்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமாக இடியுடன் கூடிய தீவிர மழை ஒரு மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக பொழியும் என்று எதிர்பார்க்கப்படும் போது இந்த எச்சரிக்கை வழங்கப்படும் என அத்துறை தனது முகநூல் பதிவில் தெரிவித்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.