கோலாலம்பூர்,அக் 15: வடகிழக்கு பருவமழை காலத்தை தொடர்ந்து இந்த ஆண்டு இறுதிக்குள் மாநிலங்களில் போதுமான காய்கறிகள் இருப்பதை வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் (கேபிகேஎம்) உறுதி செய்யும்.
தனது தரப்பு விவசாயிகளின் மட்டத்தில் காய்கறிகளின் விலையையும் கண்காணிக்கும் என அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு தெரிவித்தார்.
"நாங்கள் எப்போதும் கண்காணித்து வருகிறோம். அதனால் தான் எங்களிடம் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. மேலும், உள்நாட்டில் போதுமான அளவு (சப்ளை) இல்லை என்றால், நாங்கள் இறக்குமதி செய்ய முயற்சிப்போம்.
முக்கியமாக காய்கறிகள் கிடைக்க வேண்டும் மற்றும் அதற்கான உத்தரவாதம் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். விலையைப் பொறுத்தவரை, நாங்கள் அதை முடிந்தவரை கட்டுப்படுத்த முயற்சிக்கிறோம்," என்று அவர் கூறினார்.
முன்னதாக,வடகிழக்கு பருவமழை காலத்தை தொடர்ந்து காய்கறிகளின் விலை நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
– பெர்னாமா


