NATIONAL

கால்வாயில் ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது

15 அக்டோபர் 2024, 7:46 AM
கால்வாயில் ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது

கோலா திரங்கானு, அக்.15: பந்தாய் பாக்கா, டுங்கன் அருகே உள்ள

கால்வாயில் ஆண் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

கடற்கரைப் பகுதி வழியாகச் சென்ற பொதுமக்களிடமிருந்து குழந்தை பற்றிய

தகவல் தனது தரப்புக்கு கிடைத்ததாக டுங்குன் மாவட்ட காவல் துறைத்

தலைவர் சுப்ரிட்டெண் மைசூரா அப்துல் காதிர் கூறினார்.

இந்த வழக்கின் சந்தேக நபரை நாங்கள் தேடி வருகிறோம். குழந்தையை

கைவிடும் நோக்கத்துடன் பிறப்பை மறைத்த குற்றத்திற்காக குற்றவியல்

சட்டப் பிரிவு 317 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது, என்று அவரை

தொடர்பு கொண்டபோது கூறினார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அக்குழந்தை கெமமான் மருத்துவமனைக்கு

அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.