NATIONAL

தொடர் கனமழையால் கோலாலம்பூரில் பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன

15 அக்டோபர் 2024, 5:02 AM
தொடர் கனமழையால் கோலாலம்பூரில் பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன

கோலாலம்பூர், அக் 15: இன்று காலை 9 மணிக்குத் தொடங்கிய தொடர் கனமழையால் கோலாலம்பூரில் பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

டிபிகேஎல் ஒருங்கிணைந்த போக்குவரத்து தகவல் அமைப்பின் (ஐடிஐஎஸ்) சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் பொது மக்களின் இடுகைகள் மூலம், கோலாலம்பூரைச் சுற்றியுள்ள பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி, போக்குவரத்து இடையூறுகளை ஏற்படுத்தியதாக அறியப்படுகிறது.

ஜாலான் துன் ரசாக்கிலிருந்து விஸ்மா பெர்னாமாவுக்குச் செல்லும் பாதையும் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதையும், சுங்கை புனஸில் உள்ள பாதுகாப்பு எச்சரிக்கை அமைப்பு அபாய அளவைக் குறிப்பிடுவதையும் பெர்னாமாவின் ஆய்வு கண்டறிந்துள்ளது.

இதற்கிடையில், ஸ்மார்ட் சுரங்கப்பாதை முற்றிலும் பயனர் வழிகளுக்கு மூடப்பட்டு வெள்ளப் பணிகள் நடைபெற்று வருவதாக X ஸ்மார்ட் எக்ஸ்பிரஸ்வே இணையதளம் தெரிவித்தது.

"அப்பாதையை பயன்படுத்தும் பயனர்கள் கவனமாக வாகனத்தை செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். தயவுசெய்து உங்கள் பயணத்தை திட்டமிடுங்கள் மற்றும் போக்குவரத்து வழிமுறைகளுக்கு கீழ்ப்படியுங்கள்,"என அது கேட்டுக்கொண்டது.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.