NATIONAL

ஜாசினில் மீண்டும் வெள்ளம்- 275 பேர் நிவாரண மையங்களில் அடைக்கலம்

14 அக்டோபர் 2024, 9:53 AM
ஜாசினில் மீண்டும் வெள்ளம்- 275 பேர் நிவாரண மையங்களில் அடைக்கலம்

மலாக்கா, அக். 14 - ஜாசின் மாவட்டத்தில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டதைத்

தொடர்ந்து 77 குடும்பங்களைச் சேர்ந்த 275 பேர் ஐந்து தற்காலிக நிவாரண

மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர்.

டாங் அனும் தேசியப் பள்ளி, செர்க்காம் டாராட் தேசியப் பள்ளி, தெடோங்

தேசியப் பள்ளி, மெர்லிமாவ் தேசியப் பள்ளி மற்றும் டத்தோ அப்துல்

ரஹ்மான் யாக்கோப் தேசியப் பள்ளி ஆகியவற்றில் அவர்கள் அனைவரும்

தங்க வைக்கப்பட்டுள்ளதாக மலாக்கா மாநில பேரிடர் மேலாண்மை

செயலகம் அறிக்கை ஒன்றில் கூறியது.

பாதிக்கப்பட்ட அனைவரும் கம்போங் கிளாங் பெராப்பி மற்றும் லுபோக்

புவாயா கிராமங்களைச் சேர்ந்தவர்கள் என்று அவர்களுக்கு அடைக்கலம்

தருவதற்காக இன்று காலை 8.00 மணி மற்றும் 9.15 மணிக்கு அந்த துயர்

துடைப்பு மையங்கள் திறக்கப்பட்டன என்றும் அது தெரிவித்தது.

இன்று அதிகாலையில் பெய்த அடை மழையைத் தொடர்ந்து அப்பகுதியில்

வெள்ளம் ஏற்பட்டது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.