NATIONAL

இணைய முதலீட்டுத் திட்டத்தால் ஏமாற்றப்பட்ட வர்த்தகர்  ஒருவர் RM 244,000 இழந்தார்

14 அக்டோபர் 2024, 9:14 AM
இணைய முதலீட்டுத் திட்டத்தால் ஏமாற்றப்பட்ட வர்த்தகர்  ஒருவர் RM 244,000 இழந்தார்

குவாந்தான், அக். 14: இரட்டிப்பு வருமானம் தருவதாக உறுதியளித்த இணைய முதலீட்டுத் திட்டத்தால் ஏமாற்றப்பட்ட வர்த்தகர் ஒருவர் RM 244,000 இழப்பை சந்தித்தார்.

கடந்த ஜூலை மாதம்,முகநூல் மூலம் முதலீடு செய்து 5 முதல் 300 சதவீதம் வரை லாபத்தை வழங்கும் Efinity Capital என்ற பெயருடைய முதலீட்டுத் திட்டத்தில் பங்கேற்க 35 வயது பாதிக்கப்பட்ட பெண் ஆர்வம் காட்டுவதாக பகாங் காவல் துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் தெரிவித்தார்.

"பாதிக்கப்பட்டவர் ECMT Pro எனப்படும் முதலீட்டு விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துள்ளார். ஆகஸ்ட் 21 முதல் அக்டோபர் 3 வரையிலான காலகட்டத்தில், பாதிக்கப்பட்டவர் 11 பரிவர்த்தனைகளுடன் மொத்தம் RM244,000 மூன்று வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார்.

"சந்தேக நபரிடமிருந்து எந்த லாபமும் பெறாததால் தான் ஏமாற்றப்பட்டதை பாதிக்கப்பட்டவர் உணரத் தொடங்கினார்," என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, குறுகிய காலத்தில் பெரிய லாபத்தை அளிக்கும் முதலீடுகளை எளிதில் நம்ப வேண்டாம் என்று யஹாயா பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.