NATIONAL

நோயுற்ற தாயாரை பார்த்து விட்டு திரும்பும் போது நேர்ந்த துயரம் - மரம் விழுந்து பாதுகாவலர் மரணம்

14 அக்டோபர் 2024, 6:21 AM
நோயுற்ற தாயாரை பார்த்து விட்டு திரும்பும் போது நேர்ந்த துயரம் - மரம் விழுந்து பாதுகாவலர் மரணம்

சிக், அக். 14 - மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த பள்ளி

ஒன்றின் பாதுகாவலர் மரம் விழுந்து சம்பவ இடத்திலியே உயிரிழந்தார்.

இந்த விபத்து கம்போங் பண்டார் ஹிலிரில் நேற்று மாலை நிகழ்ந்தது.

முகமது ரிசால் அஜிஸ் (வயது 47) என்ற அந்த ஆடவர் தஞ்சோங்

பெசாரில் நோயிற்றிருக்கும் தன் தாயாரை பார்த்து விட்டு யமஹா எல்சி

135 ரக மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த

விபத்து நிகழ்ந்தது.

இந்த விபத்து தொடர்பில் நேற்று மாலை 5.58 மணியளவில் தகவல்

கிடைத்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தாங்கள் விரைந்ததாக சிக்

தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் ஜூல்ஹாரி மாட்

தாஞ்சில் கூறினார்.

சம்பவ இடத்தை அடைந்து போது மோட்டார் சைக்கிள் மற்றும்

மரக்கிளைகளுக்கு இடையே அவ்வாடவர் சிக்கிக் கொண்டிருப்பதை

தீயணைப்பு வீரர்கள் கண்டனர். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து

விட்டதை சுகாதார அமைச்சின் பணியாளர்கள் உறுதிப்படுத்தினர் என

அவர் சொன்னார்.

தீயணைப்பு வீரர்கள், பொது தற்காப்பு படை உறுப்பினர்கள், மலேசிய

தன்னார்வலர் சேவை தொண்டூழியர்கள் உள்பட 20 பேர் மரத்தை வெட்டி

அப்புறப்படுத்தி அவ்வாடவரின் சடலத்தை மீட்டனர் என்றார் அவர்.

இதனிடையே, நேற்று மாலை பெய்த பலத்தக் காற்றுடன் கூடிய

அடைமழையில் பல இடங்களில் மரங்கள் விழுந்ததாக சிக் மாவட்ட

போலீஸ் தலைவர் டிஎஸ்பி அப்துல் ரசாக் ஓஸ்மான் கூறினார்.

இச்சம்பவத்தின் போது பண்டார் ஹிலிரில் மரம் ஒன்று விழுந்து

மோட்டார் சைக்கிளோட்டியை பலியாக்கியது என்றார் அவர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.