NATIONAL

வியாழன் முதல் ஞாயிறு வரை கடல் பெருக்கு அபாயம் - பொது மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

14 அக்டோபர் 2024, 2:28 AM
வியாழன் முதல் ஞாயிறு வரை கடல் பெருக்கு அபாயம் - பொது மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

ஷா ஆலம், அக் 14 -  எதிர்வரும் வியாழக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை

வரை சிலாங்கூரில் கடல் பெருக்கு ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இக்காலக்கட்டத்தில் கடலில் நீர் மட்டம் 5.8 மீட்டர் வரை உயரும் என

கணிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட இடங்களில் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியத்தைக்

கருத்தில் கொண்டு கவனமுடன் இருக்கும்படி பொது மக்கள் மற்றும்

சாலைகளைப் பயன்படுத்துவோருக்கு ஷா ஆலம் மாநகர் மன்றம்

நினைவுறுத்தியுள்ளது.

அவசியம் ஏற்படும் பட்சத்தில் தயார் செய்யப்பட்டுள்ள தற்காலிக நிவாரண

மையங்களுக்கு செல்லும்படி பிறப்பிக்கும்படி இடப்படும் உத்தரவுகளைப்

பின்பற்றுங்கள் என அது ஆலோசனை கூறியது.

அவசர வேளைகளில் உதவிகளைப் பெறுவதற்கு ஷா ஆலம் வட்டாரத்தில்

உள்ளவர்கள் 03-55105811 என்ற எண்களில் விரைவு நடவடிக்கை

அறையைத் தொடர்பு கொள்ளும்படி மாநகர் மன்றம் தனது பேஸ்புக்

பக்கத்தில் கேட்டுக் கொண்டுள்ளது.

இம்மாதம் 2ஆம் தேதி தொடங்கி 12 நாட்களுக்கு கடல் பெருக்கு ஏற்படும்

என்று வடிகால் மற்றும் நீர்பாசனத் துறை அறிவித்துள்ளது.

இக்காலக்கட்டத்தில் கடல் நீர் மட்டம் 5.8 மீட்டர் வரை உயரும் எனவும்

அது கூறியுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.