NATIONAL

தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்

12 அக்டோபர் 2024, 8:48 AM
தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார்

கோலாலம்பூர், அக் 12: இன்று டமன்சாராவில் உள்ள அடுக்குமாடி

குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார், மேலும்

இருவர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக காலை 8.39 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகவும்,

டமன்சாரா, பெட்டாலிங் ஜெயா மற்றும் சுங்கை பூலோ தீயணைப்பு மற்றும்

மீட்பு நிலையங்களிலிருந்து (பிபிபி) 21 தீயணைப்பு வீரர்கள் சம்பவ

இடத்துக்கு விரைந்தனர் என சிலாங்கூர் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத்

துறை (ஜேபிபிஎம்) ஆபரேஷன்ஸ் கமாண்டர் ஹஸ்னோல் ஹாடி முகமட்

ரோஸ்லான் கூறினார்.

உயிரிழந்தவர் 31 வயதுடைய பெண் ஆவார் மற்றும் 29, 24 வயதுடைய ஆண்

மற்றும் பெண் இருவர் காயமடைந்தனர்.

நெருப்பின் புகையினால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாகப் பாதிக்கப்பட்டவரின் மரணம் ஏற்பட்டதாக மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தினார். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் பட்டனர்,`` என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

மேலும், 14 வது மாடியில் உள்ள யூனிட்டில் இருந்த சுவிட்ச் பாக்ஸால் தீ

விபத்து ஏற்பட்டது என்றார்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.