கோலாலம்பூர், அக். 12: நேற்று தலைநகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் கிலோமீட்டர் 27.9 இல் செம்பனை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார்.
அந்த ஓட்டுனர் (45) லிபிஸ், பகாங்கிலிருந்து கிள்ளானிற்குப் பயணித்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததாகக்
கோம்பாக் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி நூர் அரிஃபின் முகமட் நசீர் கூறினார்.
"பாதிக்கப்பட்டவர் பலத்த காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக செலாயாங் மருத்துவமனையின் உதவி மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தினார். .
"ஈரமான நிலப்பரப்பு காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது," என்று நூர் அரிஃபின் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார்.
நேற்று மாலை 5.45 மணியளவில் இச்சம்பவம் குறித்து தமக்கு தெரிவிக்கப் பட்டதாகவும், பாதிக்கப்பட்டவரின் உடல் செலாயாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் நூர் அரிஃபின் கூறினார்.
இச்சமபவம் குறித்து சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பான தகவல்கள் தெரிந்த பொதுமக்கள் போக்குவரத்து புலனாய்வு அதிகாரி இன்ஸ்பெக்டர் முகமட் ரோஹைசாட் ஹாஷிமை 012-2924420 என்ற எண்ணிலோ அல்லது கோம்பாக் மாவட்ட காவல்துறை தலைமையக செயல்பாட்டு அறையை 03-61262222 தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
– பெர்னாமா


