NATIONAL

கூடைப்பந்து மைதானத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த RM49,788.40 செலவிடப்பட்டது

11 அக்டோபர் 2024, 11:01 AM
கூடைப்பந்து மைதானத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த RM49,788.40 செலவிடப்பட்டது

ஷா ஆலம், அக் 11: தாமான் யூனிவர்ஸ்ட்டி இண்டா 2, ஶ்ரீ கெம்பாங்கானில் உள்ள கூடைப்பந்து மைதானத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ஶ்ரீ கெம்பாங்கான் மாநில சட்டமன்றத்தால் (DUN) மொத்தம் RM49,788.40 செலவிடப்பட்டது.

சிலாங்கூர் பென்யாயாங் திட்டம் (PSP) மூலம் ஒதுக்கப்பட்ட நிதி, மைதானத்தின் தரையை சுத்தம் செய்யவும், மீண்டும் சாயம் பூசவும், கூடைப்பந்து பின் பலகையை மாற்றவும் பயன்படுத்தப்பட்டது என்று சட்டமன்ற உறுப்பினர் வோங் சியூ கி கூறினார்.

"மேலும், இதை பயன்படுத்துபவர்களுக்கு வசதியாக இருக்க இருக்கைகள் பழுது பார்க்கப்பட்டு மீண்டும் சாயம் பூசப்பட்டது," என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.

குடியிருப்பாளர்கள் அருகிலுள்ள திடலிருந்து அப்பகுதிக்குச் செல்வதற்கு எளிதாக இருக்க படிக்கட்டுகளை கட்டிய சுபாங் ஜெயா மாநகராட்சியின் பங்களிப்பையும் தனது தரப்பு பாராட்டுவதாக சியூ கி கூறினார்.

மாநில அரசின் RM250,000 ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஏழு திட்டங்களில் புட்சால், கூடைப்பந்து மற்றும் பூப்பந்து மைதானங்களை மேம் படுத்தியதும்  உள்ளடங்கும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.