கோலாலம்பூர்,அக் 11: நாளை மாலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி வரை `ஆர்எச்பி லெக்காஸ் ஹைவே ரைட் 2024` சைக்கிள் ஓட்டம் நிகழ்விற்காக காஜாங்-சிரம்பான் (லெக்காஸ்) நெடுஞ்சாலை மூடப்படும்.
இந்நிகழ்வு இரவு 7.45 மணிக்கு (சனிக்கிழமை) தொடங்கும் என்று காஜாங் மாவட்ட காவல் துறைத் தலைவர் கூறினார். மேலும் சிரம்பான்,பண்டார் டெக்னாலஜி, ஜாலான் பாங்கி லாமா,ஜாலான் இகோ மஜிஸ்டிக் மற்றும் செமினி நோக்கி செல்லும் லெக்காஸ் பாதைகளும் மூடப்படும் என்று ஏசிபி நஸ்ரோன் அப்துல் யூசோவ் கூறினார்.
பணியில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரின் அறிவுறுத்தல்களை கேட்டு நடப்பதுடன், சம்பந்தப்பட்ட சாலைகள் வழியாக செல்வதை தவிர்க்கவும். அன்றைய தினம் தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு பொதுமக்களை நஸ்ரோன் அறிவுறுத்துகிறார்.
இந்நிகழ்வு சீராகவும், பாதுகாப்பாகவும் நடைபெற பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றார்.


