NATIONAL

ஜிஐஎஸ்பி வளாகங்களிலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகளின் கற்றல் முன்னேற்றம் சிறப்பாக உள்ளது

11 அக்டோபர் 2024, 10:40 AM
ஜிஐஎஸ்பி வளாகங்களிலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகளின் கற்றல் முன்னேற்றம் சிறப்பாக உள்ளது

கெப்பாலாபாத்தாஸ், அக் 11:   ஜிஐஎஸ்பி வளாகங்களிலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகளின் கல்விக்கு கடந்த அக்டோபர் 1 முதல் கல்வி அமைச்சகம் பொறுப்பேற்றது. அதன் பின் கல்வி நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

அந்த குழந்தைகளின் கற்றல் முன்னேற்றம் மிகவும் சிறப்பாக காணப்படுவதாகக் கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் தெரிவித்தார்.

"அக்குழந்தைகள் நாங்கள் வழங்கும் போதனைகளுக்கு சிறந்த ஒத்துழைப்பு வழங்கி கல்வியை சிறப்பாக கற்று வருவதை நாங்கள் உறுதி செய்வோம்," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இக்கல்வித் திட்டம் இரண்டு மாதங்களுக்கு முதல் கட்டத்தை செயல்படுத்துவதை உள்ளடக்கியது மற்றும் தேவைப்பட்டால் அடுத்த மாதத்தில் இரண்டாவது கட்டம் நீட்டிக்கப்படும்.

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.