NATIONAL

நான்காவது ஆண்டு விழாவை முன்னிட்டு கார் இல்லாத நாள் நிகழ்ச்சி ஏற்பாடு - சுபாங் ஜெயா மாநகராட்சி

10 அக்டோபர் 2024, 9:21 AM
நான்காவது ஆண்டு விழாவை முன்னிட்டு கார் இல்லாத நாள் நிகழ்ச்சி ஏற்பாடு - சுபாங் ஜெயா மாநகராட்சி

ஷா ஆலம்,அக் 10: அக்டோபர் 20 ஆம் தேதி, நகரின் நான்காவது ஆண்டு விழாவை முன்னிட்டு கார் இல்லாத நாள் நிகழ்ச்சியை சுபாங் ஜெயா மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

பண்டார் கின்றாரா, பூச்சோங்கில் உள்ள ஜெயிண்ட் பல்பொருள் அங்காடியில் காலை 7 மணி முதல் 11 மணி வரை இந் நிகழ்ச்சி நடைபெறும் என பிபிடி முகநூல் மூலம் தெரிவித்துள்ளது.

"சுபாங் ஜெயா நகரின் நான்காவது ஆண்டு விழாவை ஒன்றாகக் கொண்டாடுவோம் மற்றும் குறைந்த கார்பன் நகரத்திற்கான முயற்சிகளை ஆதரிப்போம்" என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

ஏரோபிக்ஸ், 5 கிலோமீட்டர் (கிமீ)ஓட்டம்,காலை உணவு, இலவசச் சுற்றுச்சூழல்  சந்தை மற்றும் டிங்கி ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் இடம்பெறும்.

மேலும், மக்கள்-நட்பு கவுண்டர்கள், குற்றத் தடுப்பு கண்காட்சிகள், மறுசுழற்சி மற்றும் அதிர்ஷ்ட குலுக்கு ஆகிய நடவடிக்கைகள் இடம்பெறும்.

இதில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள், https://docs.google.com/forms/d/e/1FAIpQLSebC7MDItA3ROnVdg_tw1IxHvXC6ERbelihRjNAI5SzQX4tFw/viewform என்ற இணைப்பின் மூலம் பதிவு செய்யலாம்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.