இந்த சம்பவம் குறித்து நேற்று இரவு 8.59 மணிக்கு தனது தரப்புக்கு தகவல் கிடைத்ததாக தெற்கு கிள்ளான் மாவட்ட காவல்துறை தலைவர் ஏசிபி சா ஹூங் ஃபோங் தெரிவித்தார்.
பிற்பகல் 2.20 மணியளவில் காரில் இருந்த உணவை எடுத்து வருமாறு தாய் கூறியதை அடுத்து அச்சிறுமி வாகன நிறுத்துமிடத்திற்குச் சென்றுள்ளார் என ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.
கீழே இறங்கிய சிறுமி பின் வீடு திரும்பவில்லை. மாலை 3 மணியளவில், பாதிக்கப் பட்டவரின் தாய் குழந்தையைத் தேடிச் சென்றுள்ளார். ஆனால் அச்சிறுமியை காணவில்லை," என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, பாதிக்கப் பட்டவரின் தாயார் தெற்கு கிள்ளான் மாவட்ட காவல்துறை தலைமையகத்தில் (IPD) புகார் அளித்துள்ளதாகவும், மேல் விசாரணைக்காகக் காணாமல் போனவர் தொடர்பான விசாரணை அறிக்கையை காவல்துறை திறந்ததாகவும் சா ஹூங் கூறினார்.
மட்ராவாதாஹா இன்டால் பங்சாவான் என்ற பெயருடைய அச்சிறுமி மெல்லிய உடல், தோள்பட்டை வரை நீளமான முடி மற்றும் 150 சென்டிமீட்டர் உயரம் கொண்டவராக விவரிக்கப்பட்டது.
அச்சிறுமி கடைசியாக பச்சை நிற டி-சர்ட் மற்றும் கருப்பு 'டிராக்' பேன்ட் அணிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அச்சிறுமியைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் கிள்ளான் செலாத்தான் ஐபிடியை 03-33762222 என்ற எண்ணில் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


