ஷா ஆலம்,அக் 10: ஷா ஆலம் நகரின் 24வது ஆண்டு விழாவை முன்னிட்டு 500 மோட்டார் சைக்கிள் ஓட்டுனருக்கு இலவசப் பெட்ரோல் நிரப்புவதற்கான வாய்ப்பு இன்று வழங்கப்படுகிறது.
பெட்ரோனாஸ் பெட்ரோல் நிலையம் கோத்தா கெமுனிங் 1, பெர்சியாரான் அங்கேரிக் மொகரா, செக்ஷன் 31 இல் காலை 11.30 மணிக்கு இந்நிகழ்ச்சி தொடங்கும் என்று எம்பிஎஸ்ஏ அறிவித்தது.
"இலவசமாக மோட்டார் சைக்கிள் எண்ணெய் நிரப்புவோம் திட்டத்தில் கலந்து கொள்வோம். இந்த சலுகை முதல் 500 மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்கு மட்டுமே" என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக,ஏப்ரல் 2 மற்றும் மே 21 ஆகிய தேதிகளில் நூற்றுக்கணக்கான மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களூக்கு இரண்டு தொடர் இலவச பெட்ரோல் திட்டங்களை எம்பிஎஸ்ஏ ஏற்பாடு செய்தது.
மேலும் RM20 பார்க்கிங் அபராதக் குறைப்பு பிரச்சாரம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அபராதங்களூக்கு 5 சதவீத தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளையும் எம்பிஎஸ்ஏ வழங்கியது.
அதுமட்டுமில்லாமல், எம்பிஎஸ்ஏ நூலகத்தில் அக்டோபர் மாதம் முழுவதும் பொதுமக்களுக்கு இலவச உறுப்பினர் சேர்க்கை வழங்கப்படுகிறது.


