(ஆர்.ராஜா)
ஷா ஆலம், அக். 10 - இம்மாதம் 31ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சிலாங்கூர் மாநில அரசுச் செயலகத்தில் பணிபுரியும் இந்திய துப்புரவுப் பணியாளர்கள் நேற்று பெருநாள் அன்பளிப்புகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.
மாநில அரசு செயலகத்தின் வரவேற்புக் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு ஆகியோர் கலந்து கொண்டனர்.
KREDIT: BAHAGIAN KORPORAT SUK SELANGOR
ஊழியர்களுக்கு உணவுக் கூடைகளை அன்பளிப்பாக வழங்கிய மந்திரி புசார், அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.
மாநில அரசு செயலகத்தைப் பொறுத்தவரை, துப்புரவுப் பணியாளர்கள் முக்கிய தூண்களாக கருதப்படாவிட்டாலும் தூய்மையை உறுதி செய்வதில் அவர்களின் பங்கு மிகவும் இன்றியமையாததாக விங்குகிறது.
பதவி, அந்தஸ்து வேறுபாடின்றி அனைத்து ஊழியர்களுக்கும் உரிய மரியாதையும் அங்கீகாரமும் வழங்கும் மாநில அரசின் உயரிய கடப்பாட்டை இந்த நிகழ்வு புலப்படுத்துகிறது.








