NATIONAL

தெலுக் கெமாங்கில் தற்காலிக கூடாரங்கள் பறிமுதல் - போர்ட்டிக்சன்  நகராண்மைக் கழகம் நடவடிக்கை

9 அக்டோபர் 2024, 8:01 AM
தெலுக் கெமாங்கில் தற்காலிக கூடாரங்கள் பறிமுதல் - போர்ட்டிக்சன்  நகராண்மைக் கழகம் நடவடிக்கை

சிரம்பான், அக். 9 - போர்ட்டிக்சன், தெலுக் கெமாங் கடற்கரையில்

அனுமதியின்றி அமைக்கப் பட்டிருந்த ஒன்பது தற்காலிக நீல நிறக்

கூடாரங்களை போர்ட்டிக்சன் நகராண்மைக் கழக அமலாக்கத் துறையினர்  பறிமுதல் செய்தனர்.

அக்கடற்கரை பகுதியில் நீல நிற கூடாராங்களுக்கு எதிராக இம்மாதம் 5

மற்றும் 6ஆம் தேதிகளில் அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட

கண்காணிப்பு பணியின் போது அந்த பறிமுதல் நடவடிக்கை

எடுக்கப் பட்டதாகப் போர்ட்டிக்சன் நகராண்மைக் கழகம் கூறியது.

அந்த சோதனையின் போது வாடகைதாரர் இன்றி பத்து கூடாரங்கள்

பொருத்தப்பட்டுள்ளதை அதிகாரிகள் கண்டனர். அந்த கூடாரங்கள்

அனைத்தையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். இத்தகைய நடவடிக்கைகள்

தொடர்ந்தாற் போல் மேற்கொள்ளப்படும் என அது தெரிவித்தது.

தெலுக் கெமாங் கடற்கரையில் பொது மக்களின் பார்வையை மறைக்கும்

அளவுக்கு வாடகை கூடாரங்கள் பெருகி வருவது தொடர்பில் புகார் எழுந்த

தைத் தொடர்ந்து தற்காலிக கூடாரங்களை வாடகைக்கு விடும்

தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று நெகிரி செம்பிலான்

அரசு அண்மையில் கூறியிருந்தது.

பலர் நீண்ட காலமாக தற்காலிக கூடாரங்களை வாடகைக்கு விடும்

தொழிலில் ஈடுபட்டு வருவதால் இதன் தொடர்பில் நடவடிக்கை

எடுப்பதற்கு முன்னர் அனைத்து அம்சங்களும் கருத்தில் கொள்ளப்படும்

என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டான் லீ கூன் முன்னதாக

கூறியிருந்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.