NATIONAL

ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய மறுசுழற்சி தொழிற்சாலைக்கு வெ.100,000 அபராதம்

9 அக்டோபர் 2024, 5:56 AM
ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய மறுசுழற்சி தொழிற்சாலைக்கு வெ.100,000 அபராதம்

புத்ராஜெயா, அக். 9 -  தொழிலாளர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலனை உறுதிப் படுத்தத் தவறியதற்காகப் பந்திங்கில் உள்ள மறுசுழற்சி தொழிற்சாலை ஒன்றுக்கு சிப்பாங் செஷன்ஸ் நீதிமன்றம் நேற்று 100,000 வெள்ளி அபராதம் விதித்தது.

பெஸ்ட் எடர்னிட்டி ரீசைக்கிள் டெக்னாலஜி சென்.பெர்ஹாட் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த  தொழிற்சாலையின் மேலாளர்  நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்டதை தொடர்ந்து நீதிபதி அமீர் அஃபெண்டி ஹம்சா இந்த அபராதத்தை விதித்ததாக வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை (டோஷ்) கூறியது.

2022ஆம் ஆண்டு வேலையிட  பாதுகாப்பு மற்றும் சுகாதார (திருத்தம்) சட்டம்,  இவ்வாண்டு ஜூன் 1 ஆம் தேதி அமலுக்கு வந்தப் பின்னர்  இச்சட்டத்தின் கீழ்  தொடரப்பட்ட முதல் வழக்காக இது விளங்குகிறது.

'பேப்பர் ரோல்' ஆய்வுப் பணிகளின் போது அந்த   தொழிற்சாலை பாதுகாப்பான வேலை முறையை வழங்கவில்லை என்பது கண்டறியப்பட்டது. இதன் விளைவாக ஆகஸ்டு 10ஆம் தேதி  மாலை 6.00 மணிக்கு  தொழிலாளி ஒருவர்  கடுமையான விபத்துக்குள்ளானார்.

உரிய பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதன் மூலம் 2022  தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார (திருத்தம்) சட்டத்தின் 15(1)வது பிரிவின் கீழ் உள்ள விதிகளை தொழிற்சாலை மீறியுள்ளது.

எனவே,  நிர்ணயிக்கப்பட்ட அனைத்து விதிமுறைகளையும் முறையாகப் பின்பற்றுமாறு அனைத்து தொழில்துறையினருக்கும் வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை  நினைவூட்டுகிறது. விதிமுறைகளை மீறும் எந்த ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்திற்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அது எச்சரித்தது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.