NATIONAL

பொது மக்களின் பாதுகாப்பு கருதி மரங்களை பராமரிக்கும் நடவடிக்கை - எம்.பி.எஸ்.ஜே. மேற்கொள்கிறது

9 அக்டோபர் 2024, 5:41 AM
பொது மக்களின் பாதுகாப்பு கருதி மரங்களை பராமரிக்கும் நடவடிக்கை - எம்.பி.எஸ்.ஜே. மேற்கொள்கிறது

ஷா ஆலம், அக். 9 - குடியிருப்பாளர்கள் மற்றும் சாலையைப் பயன்படுத்துவோரின்  பாதுகாப்பை உறுதி செய்வதற்காக  இந்த மாதம் தொடங்கி தனது அதிகார வரம்பிற்குட்பட்ட  17 இடங்களில் ஆபத்தான நிலையில்  உள்ள மரங்களை பராமரிக்கும் பணியை சுபாங் ஜெயா மாநகர் மன்றம் (எம்.பி.எஸ்.ஜே.) மேற்கொள்ளவுள்ளது

நான்கு மாதங்கள் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த நடவடிக்கை  மரங்கள் விழும் அபாயத்தைக் குறைப்பதற்கான தங்களின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்று மாநகர் மன்றத்தின் தகவல் தொடர்புப் பிரிவு அறிக்கை ஒன்றில்  அது கூறியது.

இந்த பராமரிப்புப் பணியில் மரக் கிளைகளை வெட்டுவது, மரத்தின் உறுதித் தன்மையை மதிப்பிடுவது மற்றும் அதிக ஆபத்தானவை என அடையாளம் காணப்பட்ட மரங்களை வெட்டுவது ஆகியவை அடங்கும்  என எம்.பி.எஸ்.ஜே. தெரிவித்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.