NATIONAL

7 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை

7 அக்டோபர் 2024, 8:58 AM
7 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை

ஷா ஆலம், அக் 7 – இன்று மாலை 6 மணி வரை 7 மாநிலங்களில் இடியுடன் கூடிய பலத்த  மழை பெய்ய வாய்புள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.

சபாவில் ( தம்புனான், பாபார், புததான், பெனம்பாங், கோத்தா கினபாலு, துஹாரான், ரானாவ், சண்டாகான், தெலுபிட், மற்றும் பெலுரான்), சரவாக்கில் (ஶ்ரீ அமான், பெதோங், சரிகாய், சிபு, மூகா, காபிட் மற்றும் பிந்துலு), கெடாவில் (சிக், பாலிங், கூலிம், பண்டார் பாரு) மற்றும் பேராக்கில் (உலு பேராக், கோலா சிலாங்கூர், கிந்தா, கம்பார்) ஆகிய இடங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே வானிலைதான் கிளந்தானில் (ஜெலி), ஜோகூரில் (குளுவாங், கூலாய், கோத்தா திங்கி, ஜோகூர் பாரு) மற்றும் திரங்கானுவில் (செதியு, கோலா நெருஸ் , உலு திரங்கானு, மாராங், டுங்குன்) மாநிலங்களிலும் நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக அத்துறை கூறியது.

மணிக்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமாக இடியுடன் கூடிய தீவிர மழை ஒரு மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக பொழியும் என்று எதிர்பார்க்கப்படும் போது இந்த எச்சரிக்கை வழங்கப்படும் என அத்துறை தனது முகநூல் பதிவில் தெரிவித்தது.

இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை என்பது  ஆறு மணிநேரத்திற்கு மிகாமல் செல்லுபடியாகக் கூடிய ஒரு  குறுகிய கால எச்சரிக்கையாகும்.

வானிலை தொடர்பான தகவல்களுக்கு பொதுமக்கள் www.met.gov.my என்ற இணையதளம்,  சமூக ஊடகங்களைப் வலம் வரலாம். சமீபத்திய மற்றும் உண்மையான தகவல்களுக்கு myCuaca செயலியை பதிவிறக்கம் செய்யவும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.