கோலாலம்பூர், அக். 7 - தலைநகரில் உள்ள சீர்திருத்தப் பள்ளியில் பாடகர் ஒருவரின் மகன் மற்றும் பல மாணவர்கள் பகடிவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தப் பிரச்சனை தொடர்பாக இதுவரை 5 புகார் அறிக்கைகள் கிடைத்துள்ளன என டாங் வாங்கி மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி சுலிசிமி அவாண்டி சுலைமான் கூறினார்.
"தண்டனை சட்டத்தின் 323வது பிரிவின் கீழ் விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளன. நாங்கள் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளோம், மேலும் வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது" என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
பாடகர் ஒருவர் (51 வயது) தனது 14 வயது மகன் பகடிவதை செய்யப்பட்டதாகவும், பள்ளியின் செயலற்ற தன்மையால் வருத்தமடைந்ததாகவும் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாடகரைத் தவிர, சில பெற்றோர்களும் கடந்த ஆண்டு இறுதியில் தங்கள் குழந்தைகள் ஆறு மாணவர்களால் பகடிவதை செய்யப்பட்டதாக இதேபோன்ற புகார்களை அளித்துள்ளனர்.
- பெர்னாமா


