NATIONAL

நுர் கார்த்தினி கொலை - இரசாயன, சவப் பரிசோதனை அறிக்கைகளை டிச.10ஆம் தேதி சமர்பிக்க நீதிமன்றம் உத்தரவு

7 அக்டோபர் 2024, 7:18 AM
நுர் கார்த்தினி கொலை - இரசாயன, சவப் பரிசோதனை அறிக்கைகளை டிச.10ஆம் தேதி சமர்பிக்க நீதிமன்றம் உத்தரவு

உலு சிலாங்கூர், அக். 7- நுர் ஃபாரா கார்த்தினி கொலை தொடர்பான

இரசாயன மற்றும் சவப்பரிசோதனை அறிக்கைகளை எதிர்வரும் டிசம்பர் 10ஆம்

தேதி சமர்பிப்பதற்கு இங்குள்ள கோல குபு பாரு நீதிமன்றம் தேதி

குறித்துள்ளது.

அவ்விரு அறிக்கைகளும் இன்னும் தயாராகவில்லை என்று அரசுத் தரப்பு

வழக்கறிஞர் எய்ரின் நபிலா அமானி நீதிமன்றத்தில் தெரிவித்ததைத்

தொடர்ந்து மாஜிஸ்திரேட் நுருள் இஸ்ஸா பாஸ்ரி இந்த வழக்கு

விசாரணைக்கான புதிய தேதியை நிர்ணயித்தார்.

இரசாயன மற்றும் சவப்பரிசோதனை அறிக்கைகள் இன்னும்

தயாராகவில்லை. ஆகவே. இந்த வழக்கிற்கான புதிய தேதியை

நிர்ணயிக்கும்படி நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்கிறேன் என்று எய்ரின்

நபிலான கூறினார்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள லான்ஸ் கார்ப்ரல் முகமது

அலிஃப் மோன்ஜானியின் வழக்கறிஞர் நுர் அய்டா முகமது ஜைனுடின்

இந்த கோரிக்கைக் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.

நுர் கார்த்தினியின் குடும்பத்தின் சார்பில் கோ சீ கியான், முகமது

நோராஸிஹான் அட்னான், லுக்மான் ஹக்கிம் அஸ்ஹார் ஆகியோர்

வழக்கை கண்காணிக்கின்றனர்.

கடந்த ஜூலை 10ஆம் தேதிக்கு 15ஆம் தேதிக்கும் இடையே உலு

பெர்ணம், எஸ்கேசி செம்பனைத் தோட்டத்தில் சுல்தான் இட்ரிஸ்

பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவியான நுர் கார்த்தினியை

படுகொலை செய்ததாக முகமது அலிஃப் மீது கடந்த ஜூலை 26ஆம் தேதி

குற்றஞ்சாட்டப்பட்டது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்க வகை

செய்யும் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் அவர்

குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.