கோலாலம்பூர், அக் 7: நாட்டின் செம்பனை தொழில் தொடர்ந்து வலுவூட்டபடுவதை
மடாணி அரசு உறுதி செய்யும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
கூறினார்.
அக்டோபர் 18 ஆம் தேதி பட்ஜெட் 2025 சமர்ப்பிக்கப் படுவதற்கு முன்னதாக, நாட்டில்
உள்ள தொழில் துறையினர் உட்பட சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரின்
கருத்துகளையும் கேட்க அரசாங்கம் தொடர்ச்சியான கருத்து பரிமாற்ற அமர்வுகளை
மேற்கொண்டு வருகிறது என்றார்.
அமர்வில், வெளிநாட்டு தொழிலாளர்கள் தொடர்பான பிரச்சனைகள் மற்றும்
குறைந்த செம்பனை உற்பத்தி விகிதம் உட்பட பல விஷயங்கள் தொட்டு கவனம்
செலுத்தப்பட்டது.
கூடுதலாக, நாட்டின் செம்பனை தொழிலின் உயிர்வாழ்வை உறுதி செய்யும்
திட்டத்தில் அதன் தொடர்பான நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கான முயற்சிகள்
விவாதிக்கப்பட்டன, என்று அன்வார் தனது X பக்கத்தில் தெரிவித்தார்.
பிரதமரின் கருத்து பரிமாற்று அமர்வில் பேராக்கின் மந்திரி புசார் , தோட்டம் மற்றும்
பொருட்கள் அமைச்சர், மாநில தலைமைச் செயலாளர் மற்றும் மூத்த அரசாங்க
அதிகாரிகள் மற்றும் செம்பனை தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பெர்னாமா


