NATIONAL

மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் மூவர் மரணம்

7 அக்டோபர் 2024, 3:57 AM
மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் மூவர் மரணம்

லாஹாட் டத்து, அக் 7: நேற்று ஜாலான் ஃபெல்டா சஹாபட், துங்குவில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஒரு சிறுமி உட்பட மூவர் உயிரிழந்தனர். மேலும் இருவர்

படுகாயமடைந்தனர்.

நான்கு சக்கர வாகனம், ஒரு கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை

சம்பந்தப்பட்ட விபத்து குறித்து மாலை 6.19 மணிக்கு தனது தரப்புக்கு அவசர

அழைப்பு வந்ததாக லாஹாட் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் டத்து

சும்சோவா ரஷீட் கூறினார்.

"காரிலிருந்த சிறுமி, பெண் ஒருவர் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்

உயிரிழந்தனர். காரில் இருந்த ஒரு ஆணும் பெண்ணும் பலத்த காயமடைந்தனர்.

நான்கு சக்கர வாகனத்தில் பயணித்த மற்ற எட்டு நபர்கள், அதாவது நான்கு ஆண்கள்,

ஒரு பெண் மற்றும் மூன்று குழந்தைகளுக்கு சிறிய காயங்கள் மட்டும் ஏற்பட்டன.

மீட்பு நடவடிக்கை இரவு 10.06 மணிக்கு முடிந்தது என்றும் சம்சோவா கூறினார்

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.