ஷா ஆலம், 6 அக்: பல முக்கியமான மாநில வளர்ச்சித் திட்டங்களை தொடர 2025 பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான சலுகைகளை மத்திய அரசு வழங்கும் என்று சிலாங்கூர் நம்புகிறது.
செமிகண்டக்டர் துறையின் மேம்பாடு மற்றும் உலு லங்காட் சிப்பாங்கிற்கு இடையே வெள்ளம் பாதிப்பை குறைக்கும் திட்ட இணைப்பு ஆகியவை ஏற்கனவே பட்டியலிடப்பட்ட விஷயங்களில் அடங்கும் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, சிலாங்கூரில் , சுபாங் சுல்தான் அப்துல் ஆஜிஸ் ஷா விமான நிலையத்திற்கு புத்துணர்ச்சி அளிப்பதும் பல கூட்டரசு சாலைகளை மேம்படுத்துவதும் இதில் அடங்கும் என்றார்.
"எடுத்துக்காட்டாக எங்களிடம் குறைக்கடத்திகள் (செமிகொண்டக்டர் ) துறையில் பல தொழில் அபிவிருத்தி படிகள் உள்ளன. அத்துறையின் முற்போக்கான வளர்ச்சிக்கு ஒரு பெரிய ஊக்கத்தொகை இருக்கும் என நாங்கள் நம்புகிறோம் மற்றும் சிலாங்கூர் வெள்ள தணிப்பு திட்டங்கள் போன்ற சில முக்கியமான திட்டங்களை சிலாங்கூர் பட்டியலிட்டுள்ளதாக கூறினார்.
பல புகார்களுக்கு உட்பட்ட போர்ட் கிள்ளான் மற்றும் மேரு போன்ற கூட்டாட்சி சாலைகளை மேம் படுத்தவும் எங்களுக்கு இந்த பட்ஜெட் உதவும்," என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
நேற்று இங்குள்ள தாமான் ஸ்ரீ மூடா, பிரிவு 25 ல் சிலாங்கூர் தேசிய பாதுகாப்பு கவுன்சில் (எம்கேஎன்) ஒருங்கிணைந்த நடவடிக்கையில் கலந்து கொண்ட பிறகு அவர் இதனை கூறினார்.
அக்டோபர் 18 ஆம் தேதி சமர்ப்பிக்கப்படும் 2025 பட்ஜெட், சிவில் பொருளாதாரம், வளமான தேசம், வளமான மக்கள் என்ற கருப்பொருளை எடுத்துக்காட்டுகிறது, இது சிவில் பொருளாதார அணுகுமுறையால் இயக்கப்படும்.
இதற்கிடையில், மக்கள் மீதான சுமையை குறைக்க சிலாங்கூர் பட்ஜெட் 2025 தாக்கல் செய்வதற்கு முன்னதாக மாநில அரசு சில சுவாரஸ்யமான முயற்சிகளை அடையாளம் கண்டு வருவதாக அமிருதீன் கூறினார்.
"இப்பொழுது அடையாளம் காணப்படுவது அழும் பிள்ளைகளுக்கு வழங்கும் இனிப்பு போன்று அல்லாது நீண்ட கால அடிப்படையில் மக்களின் வாழ்க்கை சுமையை குறைக்கும் ஒரு முயற்சியாக இருக்கும். எங்களின் கனவு மக்களுக்கு அதிகாரம் அளிப்பதே தவிர தற்காலிக பரிசு அல்ல,'' என்றார் அவர். அடுத்த நவம்பர் 15ஆம் தேதி சிலாங்கூர் பட்ஜெட் 2025 ஐ அமிருடின் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.








