ஷா ஆலம், 5 அக்: இன்று அதிகாலை 4.15 மணியளவில் ஜாலான் கோலா குபு பாரு-கேப்பில் (FT55) நிலச்சரிவு ஏற்பட்டதை உலு சிலாங்கூர் பொதுப்பணித் துறை (ஜேகேஆர்) உறுதிப் படுத்தியது.
சுமார் 20 மீட்டர் பரப்பளவில் இடிபாடுகளை அகற்றும் பணி நிறைவடைந்து, காலை 7.15 மணிக்கு பயனாளிகளுக்கு பாதை திறக்கப்பட்டது.
“இந்தச் சம்பவம் குறித்து எங்கள் பேரிடர் குழுவுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது பாதையை கடந்து செல்ல முடியும், ”என்று அவர் பேஸ்புக்கில் ஒரு பதிவின் மூலம் கூறினார்.






