NATIONAL

கெடாவில் அனைத்து தற்காலிக தங்கும் மையங்கள் மூடப்பட்டன

3 அக்டோபர் 2024, 9:30 AM
கெடாவில் அனைத்து தற்காலிக தங்கும் மையங்கள் மூடப்பட்டன

அலோர் ஸ்டார் அக் 3 : கெடாவில் வெள்ளம் முழுமையாக  வடிந்து இறுதி தற்காலிக

தங்கும் (பிபிஎஸ்) மையமும் இன்று மூடப்பட்டது.

கடந்த செப்டம்பர் 29 அன்று கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் உள்ள அலோர் மேரா

இடைநிலைப் பள்ளியில் திறக்கப் பட்ட அந்த தற்காலிக தங்கும் (பிபிஎஸ்) மையம் இன்று

காலை 9.30 மணிக்கு மூடப்பட்டது என கெடா மலேசிய குடிமைத் தற்காப்புப் படையின்

துணை இயக்குனர் முகமட் சுஹாமி முகமட் சாயின் கூறினார்.

இன்று காலை 8 மணி நிலவரப்படி 25 குடும்பங்களைச் சேர்ந்த 89 பேர் அந்த தற்காலிக

தங்கும் மையத்தில் தங்கியிருந்தனர். தற்போது பாதிக்கப் பட்டவர்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப் பட்டனர் என்று அவர் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.