NATIONAL

திடீர் வெள்ளத்தில் சிக்கிய ஒரு சிறுவன் உட்பட 5 பேர் தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டனர்

3 அக்டோபர் 2024, 5:18 AM
திடீர் வெள்ளத்தில் சிக்கிய ஒரு சிறுவன் உட்பட 5 பேர் தீயணைப்புத் துறையினரால்  மீட்கப்பட்டனர்

கோலாலம்பூர், அக். 3: செராஸ்-காஜாங் நெடுஞ்சாலையில் உள்ள கம்போங் பத்து செப்புலு என்ற இடத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய ஒரு சிறுவன் உட்பட 5 பேர் தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டனர்.

நேற்று இரவு 9.05 மணிக்கு இச்சம்பவம் குறித்து தனது தரப்புக்கு அழைப்பு வந்ததாக

மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) செயல்பாட்டுப் பிரிவின் உதவி

இயக்குநர் சிலாங்கூர் அகமட் முக்லிஸ் முக்தார் கூறினார்.

பண்டார் துன் உசேன்  ஓன் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் இருந்து ஆறு

அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்றார்.

அதிக நீர் அழுத்தம்  காரணமாக ஆற்றின் மறுகரையில் மூன்று ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு சிறுவன் என மொத்தம் ஐந்து பேர் சிக்கி கொண்டனர்.

அதிகாலை 2 மணியளவில் காயம் எதுவும் ஏற்படாமல் அனைவரும் மீட்கப்பட்டனர்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.