NATIONAL

பத்திரிகையாளர்களின் சம்பள பாக்கியை விரைந்து வழங்குவீர்- முதலாளிகளுக்கு ஃபாஹ்மி பாட்சில் வேண்டுகோள்

2 அக்டோபர் 2024, 8:06 AM
பத்திரிகையாளர்களின் சம்பள பாக்கியை விரைந்து வழங்குவீர்- முதலாளிகளுக்கு ஃபாஹ்மி பாட்சில் வேண்டுகோள்

பூசான், அக். 2- ஊடகவியலாளர்களின் சம்பள பாக்கி விவகாரத்திற்கு

விரைந்து தீர்வு காணும்படி சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனங்களை தகவல்

தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி பாட்சில் வலியுறுத்தியுள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கு பல மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படாதது

ஏற்றுக் கொள்ள முடியாத செயலாகும் என்று அவர் சொன்னார்.

இது போன்றச் சம்பவம் நிகழக்கூடாது என்பது எனது எனது கருத்தாகும்.

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சம்பளப் பாக்கியை தங்கள் ஊழியர்களுக்கு

விரைந்து வழங்க வேண்டும் என அவர் கூறினார்.

கடந்த மாதம் 30ஆம் தேதி தொடங்கி தென் கொரியாவுக்கு மூன்று நாள்

பணி நிமித்தப் பயணம் மேற்கொண்டுள்ள ஃபாஹ்மி செய்தியாளர்களிடம்

இதனைத் தெரிவித்தார்.

இவ்விவகாரத்திற்கு சிறந்த தீர்வைக் காண்பதற்கு ஏதுவாக

ஊடகவியலாளர்கள் மற்றும் முதலாளிகளுக்கு இடையே தாம்

மத்தியஸ்தராகச் செயல்படத் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் சம்பள பாக்கியை விரைந்து

செலுத்தும்படி தி மலேசியன் இன்சைட் மற்றும் தி வைப்ஸ் இணைய

ஊடக முதலாளிகளை தேசிய ஊடகவியலாளர் தேசிய தொழிற்சங்கம்

மற்றும் மெர்டேக்கா ஊடக இயக்கம் (கெராம்) ஆகியவை

வலியுறுத்தியிருந்தன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.