NATIONAL

மனநல பாதிப்பு அபாயத்தில் 40,000 அரசு ஊழியர்கள்- ஜே.பி.ஏ. தகவல்

2 அக்டோபர் 2024, 2:16 AM
மனநல பாதிப்பு அபாயத்தில் 40,000 அரசு ஊழியர்கள்- ஜே.பி.ஏ. தகவல்

கூச்சிங், அக். 2- நாட்டில் 40,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்படும் அபாயத்தைக் கொண்டிருக்கின்றனர். கடுமையான மனநல பாதிப்புக்கு ஆளாவதைத் தடுக்க அவர்களுக்கு  உடனடி தலையீடு தேவைப்படுகிறது என்று பொதுச் சேவைத் துறையின் (ஜே.பி.ஏ.) தலைமை  இயக்குநர்  டான்ஸ்ரீ வான் அகமது டாஹ்லான் அப்துல் அஜீஸ் தெரிவித்தார்.

இடர் நடத்தை தடுப்பு திட்டங்களை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் அண்மைய  முயற்சிகளில் ஒன்றாக கடந்த  மார்ச்  மாதம் 1ஆம் தேதி உருவாக்கப்பட்ட அரசு ஊழியர்கள் மனநல சுகாதார டிஜிட்டல் விபரக் குறிப்புத் திட்டம் (MyPsyD) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த விபரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று அவர் சொன்னார்.

இந்த ஆய்வின் வாயிலாக சுமார் பத்து லட்சம் அரசு ஊழியர்களிடம்  MyPsyD சுயவிவரத்தை வெற்றிகரமாக உளாளடக்கியுள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்கு உளவியல் நல்வாழ்வு 2024 மீதான அனைத்துலக மாநாட்டின் தொடக்க விழாவில் உரையாற்றிய போது  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த MyPsyD சுயவிவரம் முக்கியமானது. ஏனெனில் இது பொதுத்துறை  அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களின் அளவீடாக செயல்படுகிறது. இதன் மூலம் அவர்கள் சுய-வளர்ச்சி, தடுப்பு மற்றும் தலையீடு மூலம் யுக்திகளை வகுப்பதில் மிகவும் துல்லியமாகவும் விவேகத்துடனும்  செயல்பட்டு பாதிக்கப்பட்டவர்களின்  நல்வாழ்வை பராமரிக்கவும்  சேவைகளை வழங்கவும் முடியும் என்றார் அவர்.

அரசு ஊழியர்களிடையே உளவியல் நல்வாழ்வின் அளவு மிதமானதாக இருப்பதை அரசுப் பணியாளர்கள் மத்தியில் நடத்தப்பட்ட மலேசிய உளவியல் நல்வாழ்வு ஆய்வின் முடிவு காட்டுகிறது என்றும் அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.