கோலாலம்பூர், அக். 1- மலேசியாவில் காணப்படும் குறைவான சம்பளக்
கட்டமைப்பு முறையே ஊழியர் சேம நிதி வாரியத்தில் (இ.பி.எஃப்.)
உறுப்பினர்களின் சேமிப்பு போதுமான அளவு இல்லாதிருப்பதற்கு காரணம்
என கூறப்படுகிறது.
உறுப்பினர்கள் மத்தியில் குறிப்பாக அதிகாரபூர்வமற்ற பொருளாதார
மற்றும் தற்காலிகாக பொருளார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களிடம்
காணப்படும் காணப்படும் சீரற்ற முறையிலான இ.பி.எஃப். பங்களிப்பு இந்த
சிக்கலை இன்னும் மோசாக்கியுள்ளதாக அந்த நிதி வாரியத்தின் தலைவர்
டான்ஸ்ரீ முகமது ஜூக்கில் அலி கூறினார்.
அதிகாரப்பூர்மற்ற தொழில்களின் பால் ஏற்பட்டுள்ள அபரிமித மாற்றம்
காரணமாக இ.பி.எஃப். போன்ற ஓய்வுகால சேமிப்புத் திட்டங்களில்
பங்கேற்போரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்று அவர்
குறிப்பிட்டார்.
இது மட்டுமின்றி நிதியை நிர்வாகம் செய்வதில் காணப்படும் போதிய
திறன்மின்மை சேமிப்பு மற்றும் ஓய்வுகால திட்டமிடல் மீதான புரிதலை
கட்டுப்படுத்துகிறது என்று அவர் சொன்னார்.
இன்று இங்கு நடைபெற்ற 2024 நிதி நிர்வாக விழிப்புணர்வு மாத
நிகழ்வைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு
தெரிவித்தார்.


