கோலாலம்பூர், அக் 1: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) 57 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்தார்.
நாட்டை ஊழலில் இருந்து விடுவிக்க ஆணையம் தனது முயற்சிகளையும் அர்ப்பணிப்பையும் தொடரும் என்பதை தாம் நம்புவதாக அவர் முகநூல் பதிவில் கூறியிருந்தார்.
எம்ஏசிசி அதன் 57 ஆண்டு விழாவை இன்று கொண்டாடுகிறது.
1967 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி நிறுவப்பட்ட ஊழல் எதிர்ப்பு நிறுவனத்திற்கு (பிபிஆர்) மாற்றாக எம்ஏசிசி உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- பெர்னாமா


